காட்டேரி ; திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு பஞ்சமே இல்லை, அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றுமொரு பேய் படம் தான் காட்டேரி.

ஒரு கிராமத்தில் இருக்கும் தங்கத்தை கண்டுபிடிக்க வைபவ், அவரது மனைவி, ரவி மரியா, கருணாகரன் மற்றும் அந்த தங்கத்தை பற்றி சொன்ன ஆத்மிகா ஆகியோர் செல்கிறார்கள்.

அங்கு சில பேய்களிடம் சிக்கி தப்பித்து, பின் பேயாக அலையும் வரலட்சுமியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது, புதையல் கிடைத்ததா என்பதுதான் மீதிக் கதை.

வழக்கமான பேய் படங்களை போலவே இருந்தாலும், சில காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன.

வைபவ், அவரது மனைவியாக வரும் சோனம், ஆத்மிகா, ரவி மரியா, கருணாகரன் உள்ளிட்டோர் படம் முழுக்க வருகிறார்கள். சில காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. சில நேரங்களே வந்தாலும் வரலட்சுமி ஈர்க்கிறார்.

பெரும்பாலான காட்சிகளை இலங்கையில் எடுத்திருக்கிறார்கள். பிரசாத்தின் இசை படத்திற்கு பலம்.

மொத்தத்தில் இந்த காட்டேரி வழக்கமான அதே சமயம் ரசிக்கும்படியான ஒரு பேய் படம்.