எண்ணித்துணிக ; திரை விமர்சனம்

ஒரு பெரிய நகைக்கடையில் நடக்கும் கொள்ளை, அந்த கொள்ளையை நடத்தியவர்களுக்கும் அதில் பாதிக்கபடுபவர்களுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே எண்ணித்துணிக.

விலைமதிக்கமுடியாத வைரத்தை பினாபியின் நகைக்கடையில் பதுக்கி வைத்திருக்கிறார் அமைச்சர். இதை மோப்பம் பிடிக்கும் அமெரிக்க வைரக்கடத்தல் கும்பல் அந்த வைரங்களைத் தூக்க உள்ளூர் டீம் ஒன்றுக்குக் கொடுக்கிறது. இந்தக் கொள்ளையின் போது நாயகி கடைக்குள் இருக்க, நாயகன் என்ன செய்கிறான் என்பதே கதை!

இதுவரை பார்க்காத ஜெய்யை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படம் மூலம் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். அமைச்சராக, டாக்டர், பீஸ்ட் படங்களில் நடித்த சுனில் ரெட்டி நடித்துள்ளார். அமைச்சர் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கொள்ளைக்கார டீமின் தலைவராக வம்ஷி கிருஷ்ணா, ஜெய்யின் காதலியாக அதுல்யா ரவி, டாணாக்காரன் படத்தில் நடித்த அஞ்சலி நாயர் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகின்றனர்.

இதை ஒரு த்ரில்லர் படமாக கொடுக்க முயற்ச்சிக்கிறார் அறிமுக இயக்குனர் வெற்றிச்செல்வன்.
ஒன்லைனாகக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் கதைதான். ஆனால், சுமாரான திரைக்கதை மற்றும் படமாக்கலால் சறுக்கிறது ‘எண்ணித்துணிக’.