லாஸ்ட் 6 ஹவர்ஸ் ; திரை விமர்சனம்

2016-ல் ஹாலிவுட்டில் வெளியான டோன்ட் ப்ரீத் படத்தின் சாயலுடன் பரத் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் லாஸ்ட் 6 ஹவர்ஸ்.

தனிமையான சூழலில் அமைந்துள்ள பங்களா வீட்டில், கடற்படையில் பணியாற்றி பார்வையிழந்த பரத் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கருப்பு பணம் இருப்பதாக எண்ணி, அதை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட கும்பல் திட்டமிடுகிறது.அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு.

நள்ளிரவில் பரத் பங்களாவுக்குள் நுழையும் அவர்களுக்கு காலை விடிவதற்குள் பணத்தை கொள்ளையடித்து தப்பி செல்ல வேண்டும். இதற்கு ஆறு மணி நேரம் மட்டுமே அவகாசம் இருக்கிறது. அதற்குள் அவர்களால் திருட முடிந்ததா? பார்வையிழந்த பரத்தை அவர்களால் ஏமாற்ற முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.

கொள்ளையர்கள் பரத்தின் வீட்டுக்குள் புகுந்த பின் படம் விறுவிறுப்பாக நகர ஆரம்பிக்கிறது. வீட்டுக்குள் கொள்ளையர்களை உணர்ந்து பரத் தாக்குதல் நடத்தும் காட்சிகள் பிரமாதம்.

பார்வையிழந்த கடற்படை அதிகாரியாக, கம்பீரமாக ஆக்சன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் பரத்.

சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு, தனிமை பங்களாவுக்குள் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. கைலாஷ் மேனனின் இசை படத்திற்கு பலம்.

ஒரு ஆங்கில படத்தை தழுவி எடுத்திருந்தாலும், பரபரப்பான த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுனிஷ்குமார்.

மொத்தத்தில் இந்த லாஸ்ட் 6 ஹவர்ஸ் ஒரு அருமையான த்ரில்லர் படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *