நட்சத்திரம் நகர்கிறது ; திரை விமர்சனம்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படம் காதலின் பல்வேறு பரிணாமங்களைப் பேசுகிறது.

சமூகத்தில் தவறாக அர்த்தம் கொள்ளப்படும் வார்த்தைகளான காதல், ஒரு தலைக் காதல், தன் பாலின ஈர்ப்பு, திருநங்கை ஆகியவற்றை பற்றி விரிவாகப் பேசும் படம் நட்சத்திரம் நகர்கிறது.

புதுச்சேரியை சேர்ந்த நாடகக் குழுவில் காதல் குறித்து நாடகம் ஒன்று உருவாகக் திட்டமிடுகிறது. இதற்காக குழுவில் உள்ளவர்கள் தற்காலிக காதல் குறித்து விவாதம் செய்கிறார்கள். உரையாடல்கள் தான் படமே.

படத்தின் தன்மையால் படம் மெதுவாக நகர்வது போல் ஒரு எண்ணம் தோன்றலாம். படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை பேசியுள்ளார்கள். என்னதான் முற்போக்கு சிந்தனையுடன் நாம் வாழ்ந்தாலும் நமக்கு என்று வரும்போது சுயநலமாக தான் முடிவெடுப்போம். பெண்களை பொதுவெளியில் தவறாக பேசுவது போன்ற விஷயங்களை இந்தப்படம் அலசுகிறது.

ஏற்கனவே வெற்றிபெற்ற இசையமைப்பாளர் தென்மாவின் பாடல்கள் படத்தில் மிக சுவார்சயமாக படமாக்கப்பட்டுள்ளது. கிஷோர் குமாரின்ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

ஒருசராச்ரி குடும்பத்தில் சாதி எந்தளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக உள்ளது.

நட்சத்திரம் நகர்கிறது நல்லதொரு தாக்கத்தை அனைவர் மனதிலும் விதைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *