யூகி ; விமர்சனம்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்கி தம்பதிக்கு குழந்தை பிறந்ததிலிருந்தே வாடகைத்தாய் பற்றிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கடந்த 11ஆம் தேதி வெளியான நடிகை சமந்தா நடித்திருந்த “யசோதா” திரைப்படமும் வாடகை தாயை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான். இந்நிலையில் “யூகி” திரைப்படமும் வாடகை தாய் மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தொடக்கத்தில் கர்பமாக இருக்கும் கயல் ஆனந்தி திடீரென பேருந்து நிறுத்தத்தில் காணாமல் போகிறார். இவரை கண்டுபிடித்து தரும்படி காவல் துறையில் ஓய்வு பெற்ற பிரதாப் போத்தனிடம் உதவி கேட்க, அவர் சஸ்பெண்ட்டில் இருக்கும் கதிரை ஆனந்தியை தேடும் உதவிக்கு அனுப்பி வைக்கிறார். இவர்களுடன் நரேனும் சேர்ந்து கயலை தேடுகிறார்கள்.

இவர்கள் ஒருபக்கம் தேடிக்கொடிருக்க `மறுபக்கம் நட்டி தேடிக்கொண்டிருக்கிறார். தேடுதலில் பல திருப்பு முனைகள் வர ஆனந்தியை இறுதியில் கண்டுபிடித்தனரா இல்லையா? அவருக்கு என்ன ஆனது? என்பதுதான் மீதி கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கதிர், நரேன், நட்டி போன்றவர்களை சுற்றியே கதை நகர்கிறது. படத்தில் ஜான் விஜய் மற்றும் வினோதினி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை எடுத்திருந்த இயக்குனர், படத்தின் கதாபாத்திரங்களை கட்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், படமானது துண்டு துண்டாக இருப்பதினால் படத்தின் கதை சரியாக விளங்கவில்லை. மேலும், நட்டி கதாபாத்திரம் செய்யும் செயல்கள் குழப்பமாகவே இருந்தது இவர் யார் என்று தெரியும் போது கூட அவரின் கதாபாத்திரம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. மேலும் கடைசி வரையிலும் இவர் தான் குற்றவாளி என்ற சந்தேகம் பாடத்தை பார்ப்பவர்களுக்கு வரவில்லை.

பவித்ரா லட்சிமி மற்றும் கயல் ஆனந்தியை நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களின் கதாப்பத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது, அவர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.

மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் பிடித்தவர்கள் இப்படத்தினை விரும்புவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *