இந்த உலகத்தில் படிக்க தெரிந்தவனையே சுலபமாக ஏமாற்றி அவன் தலையில் பானையை கவிழ்த்துவிட்டு போகிறார்கள். இந்த படத்தில் சிகாமணியாக வரும் பரத் எழுத படிக்க தெரியாத ஒரு அம்பிராணி. இப்படிபட்டவன் ஒரு பெரிய பணக்காரனாக இருந்தால் அது யாருக்கு கொண்டாட்டம். அவனை சுற்றியிருக்கும் நண்பர்களுக்கு அந்த தனலட்சுமியே அபார்ட்மெண்ட் பிளாட்டை இலவசமாக வாடகைக்கு விட்டால் எப்படி இருக்கும் அந்த மாதிரி நல்லா ஓசி பஜனை அடிக்கிறார்கள் நண்பர்கள்… 10 ஆயிரம் ரூபாய் கேட்டா 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்ற கணக்கு தெரியாத ஒருவனை அநியாயத்து ஏமாத்துகிறார்கள் நண்பர்கள்.
பரத்தின் உண்மையான பாசமுள்ள நண்பனாக வருகிறார் கருணாகரன். எத்தனையோ முறை கருணாகரன் சொல்லியும் அவனது நண்பர்கள் மீது சந்தேகப்படாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை அனைத்தும் தெரியவர நண்பர்களை வெறுக்காமல் அவர்கள் மீது பாசத்தையே காட்டுகிறார். படிக்காத எனக்கு நன்றாக படித்த பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்று காலேஜ் காலேஜ்ஜாக சுற்றுகிறார். காதலியை தேர்ந்தெடுக்க இவர் எடுக்கும் முயற்சி அரித பழசு என்றாலும் ரசிக்க வைக்கிறது.
ஒருவழியாக நந்திதாவை பார்த்து அவரை பின் தொடர்ந்து சென்று அவரை பெண் கேட்க பார்க்கிறார்கள் பரத்தும், கருணாகரனும் ஆனால் சென்ற இடத்தில் பரத்தை ஒரு MBBS டாக்டர் என்று தப்பாக நினைத்து நந்திதாவை பரத்திற்கு திருமணம் செய்து வைக்கிறார் தம்பி ராமைய்யா. சித்த வைத்திய மருத்துவரான பரத்திற்கு இப்படி ஒரு சிக்கல் வந்தவுடன் இதை மனைவியிடம் சொல்லலாம வேண்டாமா என்று குழப்போதோடு இருக்கிறார் பரத். இன்னொரு பக்கம் நந்திதாவும் குழப்பத்தில் இருக்க இந்த பொண்ணு ஏன் இப்படி திருட்டு முழி முழிக்குதுன்னு யோசிக்கிறதுக்குள்ள நமக்கு விடை சொல்லிவிடுகிறார் தம்பி ராமைய்யா.
படித்த பெண்ணை திருமணம் செய்ய நினைத்த பரத்திற்கு சுத்தமாக படிக்காத நந்திதாதான் மனைவியாகிறார். இதை இருவரும் மறைத்து வாழ்ந்து கொண்டிருக்க, பரத்தின் அம்மாவோ நந்திதாவிடம் பல வீட்டு பொறுப்புகளை கொடுக்கிறார், எல்லாமே கணக்கு வழக்கு, வங்கி சம்பந்தப்பட்டது, ஆங்கில நாளிதழ படிப்பது என்று நந்திதாவை சிக்க வைக்கும் பொறுப்புகளாக இருக்க, நந்திதா படிக்காத விஷயம் பரத் நடத்தும் அறக்கட்டளையின் மேனேஜரான போஸ்க்கு தெரிய வருகிறது. இதனால் நந்திதாவை அடிக்கடி வீட்டிற்கு வந்து போகும்படி மிரட்டுகிறார்.
இதை நந்திதாவின் மாமியாரான பரத்தின் அம்மா கண்டுபிடித்துவிட அதன் பிறகு ஏற்படும் களேபரமே படத்தின் க்ளைமேக்ஸ். படிக்காத தம்பிகள் இணைந்தார்களா?, அந்த மேனேஜர் என்ன ஆனான்? என்பதே மீதிக் கதை. காமெடிக்கு நிறையபேர் இருந்தாலும் தம்பி ராமைய்யா செய்யும் காமெடி நம்மை சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்று கண்ணீர் விட வைக்கிறார். மனுஷன் படத்துக்கு படம் பாடி லேங்குவேஜ்ஜை மாற்றிக் கொண்டேயிருக்கிறார் அற்புதம் சாரே…. குறிப்பாக அந்த முட்டை காமெடி படத்தின் ஹைலைட்… ஹஹஹஹ…..
அறிமுக படத்திலேயே நல்ல கருத்தை முன் நிறுத்தி சித்த மருத்துவத்தின் நன்மையை விளக்கியிருக்கிறார் எல்.ஜி.ரவிச்சந்தர். சண்டைக்காட்சிகளில் ஹரிதினேஷ் பட்டையை கிளப்பியிருக்கிறார். இசையும் பாராட்டுக்குரிய விதத்தில் இருப்பதால் சைமனுக்கும் சேர்த்து படக்குழுவினர் அனைவருக்கும் பெரிய பொக்கே கொடுத்து வரவேற்க்கலாம் கோடம்பாக்கத்தில்…