தற்போது அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் டைரக்சனில் ‘இருமுகன்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் விக்ரம்.. முதன்முதலாக விக்ரமுடன் நயன்தாரா ஜோடிசெர்ந்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்சிலேயே முடிவடைந்து இருக்கவேண்டியது.. ஆனால் சில காரணங்களால் இந்த மாதமும் தொடர்ந்து நடக்கிறது..
இதனால் விக்ரம் அடுத்ததாக திரு இயக்கத்தில் நடிக்கவுள்ள கருடா படப்பிடிப்பிற்கு சிக்கல் எழுந்துள்ளது.. காரணம் இந்தப்படத்தையும் ஏப்ரலில் தான் ஆரம்பிக்க திட்டம் வைத்திருந்தார்களாம். சரி, இருமுகன் படத்தில் நடிக்காத தேதிகளில், கருடா படத்தில் மாறிமாறி நடிக்கலாம் என்றால் இருமுகன் படத்திற்காக விக்ரம் வளர்த்துள்ள தாடி இடைஞ்சலாக இருக்கிறதாம்.. இருமுகன் முடியும் அறை தாடியை எடுக்க முடியாது என்பதால் அதுவரை கருடா படக்குழுவினர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம்.