நடிகரைப் புகழ்ந்து தள்ளும் இயக்குனர்!

ஆன்லைனிலும், போனிலும் நிறைய பேசியிருந்தாலும், முதன் முதலாய் சந்தித்தது ‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஸ்கிரிப்டை படிக்க அழைத்த போதுதான். மிக சீரியஸாய் ஒரே மூச்சில் படித்துவிட்டு, அந்த கெளதம் கேரக்டரை யார் பண்றது? என்றார். யார் பண்ணா நல்லாருக்கும்னு சொல்லுங்க.. என்றேன். நான் பண்ணா எனக்கு நல்லாருக்கும்னு சொன்னார்.

அதுதான் பாலாஜி!

நீங்க தான் பண்றீங்க அதுக்குத்தான் ஸ்கிரிப்டை படிக்கச் சொன்னேன் என்றேன். தேங்க்ஸ் சங்கர்ஜி.. என்றார். நான் எப்படி இருக்கேனோ அது போலவே நடிக்க ஒரு கேரக்டர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் நான் ரொம்ப என்ஜாய் பண்ணப் போறேன்னு நினைக்கிறேன் என்றார். நிஜமாகவே அத்தனை என்ஜாய் செய்துதான் நடித்தார்.

ஷுட்டிங்கின் போது ஒரு நாள் கூட டயலாக்கிலோ, கண்டினியூட்டியிலோ தவறே செய்யாமல் அவ்வளவு பர்பெக்டாய் ஷாட் பை ஷாட் சும்மா வழுக்கிக் கொண்டு போகும். இவருக்கும் தமனுக்குமான காட்சிகளின் படப்பிடிப்பு. படத்திலும் சிறப்பாக வந்திருக்கிறது. ரேடியோ ஆர்.ஜே, நடிகர், சென்சிபிளான நகைச்சுவை உணர்வுடயவர், அதையெல்லாம் மீறி சிறந்த நண்பர். நல்ல மனிதர்.

தொட்டால் தொடரும் படத்தின் ஹீரோ பாலாஜியைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் படத்தின் இயக்குனர் கேபிள் ஷங்கர்.