சி2எச்’சில் மட்டுமல்ல ; செக் மோசடியிலும் மகளை பங்குதாரர் ஆக்கிய சேரன்..!


வானத்தை வில்லாக வளைப்பேன் என்கிற ரேஞ்சில் தான் தனது சி2எச் நிறுவனத்தை ஆரம்பித்தார் இயக்குனர் சேரன்.. அவரது முதல் நோக்கம் போணியாகாமல் இருந்த தனது ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை எப்படியாவது, அதாவது டிவிடியிலாவது தள்ளி ரிலீஸ் செய்து போட்ட காசை எடுத்துவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால் அந்த ஒரு படத்தை தவிர வேறு எந்தப்படத்தையும் அவரால் சொன்னபடி வாராவாரம் டிவிடியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆனால் இந்த நிறுவனத்தின் டீலர்களாகவும் ஏஜென்ட்டுகளாகவும் பலர் முன் தொகை கட்டி சேர்ந்திருந்தனர்.. அதில் ஒருவரான பழனியப்பன் என்பவர், கிட்டத்தட்ட எட்டரை லட்சம் ரூபாய் வரை தனது முன்பணத்தை தராமல் சேரன் இழுத்தடித்ததுடன் செக் மோசடியும் செய்திருக்கிறார் என ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து இயக்குநர் சேரன், அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகியோர் மார்ச் 10–ந்தேதி ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி. நிறுவனம் ஆரம்பித்தபோது சேரன் தனது மகளை பங்குதாரர் ஆக்கியது சரி.. ஆனால் செக் மோசடியிலும் அவரை இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கலாமா என வேதனைப்படுகிறார்களாம் சேரனின் நண்பர்கள்.