வெளிப்பட்டது குட்டு ; சொந்த பகையை மனதில் வைத்து விஷால்-கார்த்தியை தாக்கிய சேரன்…!

இயக்குனர் சேரனுக்கு உணர்ச்சிவசப்பட்டால் தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. இஷ்டத்துக்கு பேசுவார்.. சில வருடங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இயக்குனர்கள் சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் இவரும் கண்டபடி பொங்கினார். ஆனால் இவர் எஸ்கேப் ஆக முழு டார்கெட்டும் கடைசியாக பேசிய சீமான் பக்கம் திரும்பியது.

சமீபத்தில் நடிகர்சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தில் பேசிய சேரன், விஷால் – கார்த்தி இருவரையும் வறுத்தெடுத்தார் நீங்க போய் நல்ல நடிக்க கத்துக்கிட்டு வாங்க.. அப்புறம் பதவிக்கு ஆசைப்படலாம் என்றார். நடிப்பை பற்றி சேரன் பேசுகிறாரே என அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பு வந்தாலும், பாவம், இந்த மனுஷன் நமக்காக பேசுகிறாரே என சிரிக்காமல் வாயை மூடிக்கொண்டார்கள்..

இறுதியாக பேசி முடிக்கும்போது, தமிழன் தான் பொறுப்புக்கு வரவேண்டும் என தமிழ் தமிழ் என்று குரல்கொடுத்துவிட்டு இறங்கிய இந்த பச்சை தமிழன் தான், தனது சி2எச் துவக்க விழா காமராஜர் அரங்கத்தில் நடந்தபோது அதில் தொகுத்து வழங்குவதற்காக கேரளாவில் இருந்து அவரது ஆஸ்தான நாயகியான மலையாளியான பத்மபிரியாவை பிளைட் டிக்கெட் போட்டுக்கொடுத்து வரவழைத்தார்..

இத்தனைக்கும் அந்த அம்மா தமிழை கடித்து தின்றபடி பேசியது மொத்தமே ரெண்டு பக்கம் தான் இருக்கும்.. சேரன் சார் கூப்பிட்டதால தட்டமுடியாம வந்தேன்னு அந்தம்மா மேடையிலேயே சொல்லுச்சு… ஏன் இங்கே தமிழ்பொண்ணுங்க, இல்லை தமிழ் நடிகைங்க யாரும் தொகுத்து வழங்க மாட்டாங்கன்னுதான் மலையாளியான பத்மப்ரியாவை சேரன் வரவழைத்தாரோ..? (இதில் பத்மபிரியாவை நாம் குற்றம் சாட்டவில்லை)

அப்படிப்பட்ட சேரன்தான் இப்போது, “விஷால், கார்த்தி மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பினால்தான் அன்றைக்கு அவர்களை தாக்கி பேசினேன்.. மற்றபடி நான் பாண்டவர் அணிக்கு எதிரானவன் இல்லை” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்படியென்ன தனிப்பட்ட வெறுப்பு..? சில வருடங்களுக்கு முன் விஷாலிடம் கதைசொல்லிவிட்டு கால்ஷீட் கேட்டாராம் சேரன். முதலில் தருவதாக சொன்ன விஷால் அதன்பின் பதிலேதும் சொல்லவில்லையாம்.. அதேபோல கார்த்தியிடமும் அண்ணன் தங்கை கதை ஒன்றை சொன்னாராம்.. அவரும் இதேபோல பதில் கூறாமல் நழுவிட்டாராம்..

இன்னொரு முறை திருட்டு விசிடி பிரச்சனையில் விஷால் தட்டிக்கேட்டதை இவர் பாராட்டினாராம். ஆனால் இவர் ஆரம்பித்த சி2எச் நிறுவனத்தை விஷால் பாராட்டவில்லையாம். அதனால் நான் பாராட்டினேனே, நீ ஏன் என்னை பாராட்டவில்லை என்கிற கோபமும் இருந்து வந்திருக்கிறது.

“என் படத்தில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை நேரடியாக என்னிடம் சொல்லியிருக்கலாமே.. அந்த கோபத்தில் தான் அன்று சரத்குமார் அணிக்காக பேசும்போது என்னை அறியாமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்” என இப்போது விளக்கம் கூறி வருத்தமும் தெரிவிள்ளார் சேரன்..