அண்ணாத்த படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர்?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிகை மீனா, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தா மற்றும் உணவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கரோனோ வைரஸ் அச்சம் காரணமாக மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இத் திரைப்படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கோபிச்சந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.