காலா படம் அப்படி இப்படி என ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அது எதுவும் ரஜினியை பாதித்ததாக தெரியவில்லை.. பாதிக்கவும் போவதில்லை.. இதனால் காலா படத்தை ரிலீஸ் செய்த கையோடு கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் உள்ள கல்லூரியில் நடந்து வருகிறது.
தர்மத்தின் தலைவன் படத்திற்கு பிறகு அதாவது முப்பது வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தில் ரஜினி, மீண்டும் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரஜினி மீண்டும் இளமையான தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்ல ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா உருவான சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் உடனுக்குடன் ரஜினியின் போட்டோக்கள் வெளியாகின. அஜித், விஜய் படத்தின் படிப்பிடிப்பு போல ஓவராக மூடிவைக்கவும் கூடாது. காலா, கபாலி போல அதிகப்படியான புகைப்படங்கள், கெட்டப்புகள் வெளியாக விட்டாலும் நன்றாக இருக்காது. எதற்கும் ஒரு லிமிட் இருக்கவேண்டும் அல்லவா..?
அந்தப்படங்களில் நிகழ்ந்தது போல இதில் நிகழாமல் இருக்க படப்பிடிப்பு தளத்தில் பலத்த கட்டுப்பாடுகள் கார்த்திக் சுப்புராஜால் விதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பின் போது எந்த காட்சியும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதற்காக தனியார் பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் என்பதால் ரகசியம் காப்பதில் வெகு தீவிரமாக இறங்கியுள்ளது.