க்யாரே செட்டிங்கா..? ; அதிரவிட்ட தல தோனி


11வது ஐபிஎல் திருவிழா, வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது என்பதால் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்..

இந்தநிலையில் தோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சென்னை கிங்ஸ் வீரர்கள் ‘காலா’ படத்தின் டீசரில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் பேசி ஒரு புதிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் மற்றவர்கள் ஆளுக்கொரு வசனம் பேச, தோனி ரொம்பவே பேமஸான ‘க்யாரே.. செட்டிங்கா’ என்கிற வசனத்தை பேசியுள்ளார். ரஜினி ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் இதனை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான தோனி, இதேபோல கபாலி திரைப்படம் வெளியான போது ரஜினி போல போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டதும் கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த தோனி சூப்பர்ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும் அரசியல்வாதிகளுமே ரஜினி ரசிகர்களாக மாறும்போது கிரிக்கெட் வீரர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..?