Tamizh News

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘அம்மிணி’.

பிரபல நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராம கிருஷ்ணன் தனது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவதுப் படமான ”அம்மிணி’  படத்தின் பூஜையை சென்னையில் இன்று எளிமையாக நடத்தினார்.Tag Entertainment [P] ltd  நிறுவனத்தின் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்கும் ‘அம்மிணி’ மார்ச் மாதம் துவங்க உள்ள்ளது.
 
இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ‘அம்மிணி’  திரைப் படத்தைப் பற்றிப் பேசும் போது ‘ நான் அண்மையில் சந்தித்த ஒரு  அம்மணியை பற்றியக் கதை.அவரும்,அவரது வாழ்வு இலக்கியமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை , புரிந்துக் கொள்ள முயற்சிக்கவும் இல்லை.பொருள் ஆதாரத்தை தாண்டிய வாழ்கை ஒன்று உண்டு என்பதை நான் அவரிடம் தான் உணர்ந்தேன்.
இந்த யதார்த்தத்தை திரைப்படமாக சித்தரித்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்துடன் மேலும் பல சுவராசியமான கதா பாத்திரங்கள் மூலமும் சுவாரசியாமான  சம்பவங்கள் மூலமாகவும்  படத்துக்கு வலு சேர்த்து இருக்கிறேன். கதா பாத்திரங்களுக்கு ஏற்ப நடிக நடிகையர் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வெவ்வேறு துறைகளில் உள்ள வல்லுனர்களை தொழில் நுட்ப கலைஞர்களாக  ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.
என் ஒவ்வொருபடத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என விழைபவள்  நான். இந்த படத்திலும் என் முத்திரை இருக்கும் ‘ என்று வெற்றி பெரும் தீர்க்கத்தை கண்களில் வெளிக் காட்டி தெரிவித்தார்.