சில பேர் இருக்கிறார்கள், குறிப்பாக நடிகைகள் தான் ஒரு ஹீரோவுடன் நடிக்கும்போது, அவரை மாதிரி ஒரு மனிதரை பார்த்ததில்லை என சம்பந்தப்பட்ட நடிகருக்கு ஐஸ் வைப்பதற்காக அவ்வப்போது கூவுவார்கள்.. ஹீரோக்களும் இதெல்லாம் சகஜமப்பா என பெரிதாக அவற்றை எடுத்துகொள்வதில்லை..
ஆனால் சர்ச்சைகளுக்கு பெயர்போன நம் அனிருத், சமீபத்தில் அஜித் படத்திற்கு இசையமைப்பது பற்றி ஒரு பேட்டியில் என்ன சொல்லியிருந்தார் தெரியுமா..?
“வேதாளம்ல ஒர்க் பண்ணும்போதும் சரி, இப்பவும் சரி அஜித் சார் ரொம்ப என்கரேஜிங்கா பேசுவார். நானும் என் பெஸ்ட்டை கொடுத்திருக்கேன். மியூசிக்ல தலையிட மாட்டார். அஜித் சார் மாதிரி ஒரு ஜென்ட்டில்மேனை பார்க்கவே முடியாது” என கூறியுள்ளார்..
அஜித்தை ஜென்டில்மேன் என சொல்வதை யாரும் தவறென சொல்லப்போவதில்லை. ஆனால் அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்த்தது இல்லை என்றால் அப்போ விஜய் ஜென்டில்மேன் கிடையாதா..? அல்லது ‘கத்தி’ படத்தில் நீங்கள் பணியாற்றியபோது அவர் ஜென்டில்மேனாக நடந்துகொள்ளவில்லையா என்றும் இவரை சினிமாவில் வளர்த்து ஆளாக்கிய தனுஷ் ஜென்டில்மேன் கிடையாதா என்றும் அனிருத்தின் பேச்சுக்கு இப்போதே விஜய், தனுஷ் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்.