பேட்ட-விஸ்வாசம் ரிலீஸ் சிக்கல் முடிவுக்கு வந்ததா..?


ரஜினி நன்கு ஆடி ஓடிக்கொண்டிருந்த காலகட்டங்களில் வருடத்திற்கு இரண்டு படம், அட்லீஸ்ட் ஒரு படமாவது தரக்கூடாதா என ரசிகர்கள் ஏங்கிய காலமெல்லாம் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு வருடம், மூன்று வருடம் என இடைவெளி விட்டுவிடுவார் ரஜினி.

ஆனால் ஆச்சர்யமாக கடந்த வருடம் கபாலி, இந்த வருடம் ஜூன் மாதம் காலா, இதோ நவம்பர் மாதம் ‘2.O’, என தொடர்ந்து படங்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ள ரஜினி போனஸ் ட்ரீட்டாக, வரும் ஜனவரியில் அதாவது பொங்கல் பண்டிகையில் தனது ‘பேட்ட’ படத்தையும் ரிலீஸ் செய்கிறார்..

ஆனால் ஏற்கனவே பொங்கல் பண்டிகை ரிலீஸுக்கு அஜித் நடித்துவரும் விஸ்வாசம் தயாராக இருக்கிறதே எப்படி ரஜினி படம் ரிலீஸ் ஆகும், இரண்டு படத்திற்குமே அதிக அளவு தியேட்டர்கள் கிடைக்காதே, வசூல் பாதிக்குமே என்கிற சந்தேகம் இருந்து வந்தது.

ஆனால் இப்போது பிரச்சனை சரியாகி, விஸ்வாசம் படம் நான்கு நாட்கள் முன்னதாக அதாவது ஜன-1௦ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் ‘பேட்ட’ படம் பொங்கலன்று ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது. விஸ்வாசம் படத்தை நான்கு நாட்களில் பெருமளவு ரசிகர்கள் பார்த்து விடுவார்கள் என்பதால், பேட்ட படம் வெளியாகும்போது, விஸ்வாசம் பட தியேட்டர்கள், மற்றும் காட்சிகளின் எண்ணிக்கையை குறைத்து அதை பேட்ட படத்திற்கு தந்துவிட முடிவு செய்துள்ளார்களாம்.