தமிழ்த் திரையுலகத்தில் எப்போதுமே வசூல் நாயகர்கள் என்ற ஒரு அந்தஸ்து உண்டு. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நாயகர்கள் மட்டுமே அந்த அந்தஸ்தில் இருப்பார்கள். குறிப்பாக அவருக்கு எதிர் போட்டியாளர் நடிப்பில் கவனம் செலுத்த, இவர்கலோரசிகர்களை கவர்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.
அந்த விதத்தில் அந்தக் காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி, அவருக்கு அடுத்து எம்ஜிஆர், அதன் பின் ரஜினிகாந்த், கடந்த சில வருடங்களாக விஜய் என ஒவ்வொரு தலைமுறையிலும் சில நாயகர்கள் தங்களுக்கென தனி இடத்தை பிடித்தனர்,.
இவர்களுக்கு அடுத்து சிம்பு, தனுஷ், அவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என்கிற ஒப்பீடு வரை வந்தாச்சு. ஆனால் நேற்று ‘ரெமோ’ படத்தின் நன்றி விழாவில் பேசிய அனுபவம் வாய்ந்த திருப்பூர் விநியோகஸ்தர் சுப்பிரமணி, ரஜினி விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நடிகர், விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்த்ம் நடிகர் என ஒரே போடாக போட்டனர்.. புரிகிறதா.? தொடர்ந்து தோல்விபடங்களை கொடுக்கும் தனுஷும் சிம்புவும் இந்தப்பட்டியலில் இல்லை என்பதை.. அதுதான் யதார்த்தம்.