“என் கதையை சுட்டு ‘ஸ்கெட்ச்’ போட்டுவிட்டார்கள் ; கதறும் குறும்பட இயக்குனர்..!


தமிழ்சினிமாவில் கதை திருட்டு என்பது சர்வ சாதரணமாகி விட்டது. ஒரு விழாவில் பேசிய ஒரு தயாரிப்பாளர், அட்லி கிட்டத்தட்ட பத்து படங்களில் இருந்து காப்பியடித்து தான் படம் எடுப்பார் என தைரியமாக சொல்கிறார். ஆனால் இதுகுறித்து அட்லியிடம் இருந்து ஒரு மறுப்பு கூட வெளிவரவில்லை.

பொதுவாகவே ஒரு படம் வெளியாகி ஹிட்டான பின்பு அடுத்த நாளிலேயே இது தன்னுடைய கதை என சிலர் பஞ்சாயத்து கூட்டுவதுண்டு. சமீபத்தில் அறம், அருவி படங்களுக்கு கூட அப்படி சர்ச்சையான நிகழ்வுகள் நடந்தன. மெட்ராஸ் கதை என்னுடையது’ என போர்க்கொடி தூக்கிய ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினாரே, ‘அறம்’ படம் வெளியானபோது இதேபோல இன்னொருவரின் குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டி இருந்தது தனிக்கதை.

அப்படித்தான் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கெட்ச்’ படத்தை பார்த்துவிட்டு இது தன்னுடைய குறும்படத்தின் கதை என போர்க்கொடி தூக்கியுள்ளார் இயக்குனர் சாய் பிள்ளை என்பவர். 2௦15ஆம் வருடத்தில் இவர் ‘முருகா’ அசோக் குமாரை வைத்து ‘ஸ்கெட்ச்’ என்கிற 25 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை இயக்கி, அதை யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘ஸ்கெட்ச்’ படத்தை பார்த்துவிட்டு தனது குறும்படத்தின் கான்செப்ட்டை அப்படியே காப்பியடித்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக்கில் குமுறி வருகிறார் சாய் பிள்ளை.

பைனான்ஸியர்களிடம் சரியாக ட்யூ கட்டாதவர்களின் கார்களை தூக்கி வரும் வேலை பார்க்கும் நாயகனின் கதை தான் ‘ஸ்கெட்ச்’. சாய் பிள்ளை இயக்கியுள்ள குறும்படத்திலும் ட்யூ கட்டாத கார்களை தூக்குவது தான் கான்செப்ட்..

ஆக ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பது தெளிவாகிறது அல்லவா..?