சும்மா கிழி…… வைரலாகும் சூப்பர்ஸ்டாரின் தர்பார் டைட்டில் சாங்!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் டைட்டில் சாங் யூடியூப்பில் வெளியாகி செம வைரலாகி உள்ளது.

பேட்ட திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படத்தின் ”சும்மா கிழி” எனத் தொடங்கும் டைட்டில் சாங் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்.

சூப்பர்ஸ்டாரின் ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தப்பாடலை பாடியுள்ளார். கவிஞர் விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இதன் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.