டி.ராஜேந்தர் நட்புக்காக என்றால் ஓடோடி வருபவர் தான். ஆனால் அவராக வருவது வேறு..பிரச்சனையில் பப்ளிசிட்டி தேடுவதற்காக அவரை வரவழைப்பது வேறு.. நேற்று புலி, போக்கிரிராஜா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தமிழ் திரைப்படங்களை காப்பாற்றுங்கள் ஈன ஒரு திடீர் உண்ணாவிரதத்தை அறிவித்து பேனரை மாட்டி அமர்ந்துவிட்டார்..
அதற்கு பத்து செட் பிராப்பர்ட்டி தயாரிப்பளர்களும் வந்து அமர்ந்துவிட்டார்கள்.. ஏற்கனவே புலி மற்றும் போக்கிரி ராஜா படங்களின் ரிலீஸ் பிரச்சனையில் தனக்கு உதவி செய்த டி.ஆரை இந்த உண்ணாவிரதத்திற்கு அழைத்திருந்தார் பி.டி.செல்வகுமார்.
அனால் இதற்கு முன் படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட கூடாதே என்பதால் ஓடோடி வந்த டி.ஆர், இந்த உண்ணாவிரதம் பி.டி.செல்வகுமாரின் சுயநலத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்துகொண்டார். இதில் கலந்துகொண்டால் தான் அடுத்து ரிலீஸ் செய்யவிருக்கும் தனது மகனின் படத்துக்கு சிக்கல். வரும் என்பதால் கடைசிவரை உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்கு அவர் வரவே இல்லை. ஏதாவது பரபரப்பு செய்தி கிடைக்கும் என நம்பி வந்த மீடியாக்காரர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.