சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை கௌதம் மேனன் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதும் பலரும் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.. இது என்ன புதுவகையான கூட்டணி என்று நினைத்தவர்களுக்கு இதற்கு பின்னால் இருக்கும் திட்டம் தெரிவதற்கு வாய்ப்பில்லை தானே..?
ஆம்.. திட்டம் தான்.. தற்போது சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி முடித்துவிட்டார்.. அடுத்ததாக தனுஷை அவித்து ஒரு படம் இயக்கம் ஆவலில் இருக்கிறார் கௌதம் மேனன்..சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கலாம் என்கிற திட்டத்தில் தான் செல்வராகவனுக்கு படம் இயக்கம் வாய்ப்பை கொடுத்து அப்படியே தனுஷின் கால்ஷீட்டை வாங்க திட்டமிட்டுள்ளாராம்..
தனுஷிடம் இப்படியெல்லாம் செய்துதான் கால்ஷீட் வாங்கவேண்டிய நிலையிலா கௌதம் மேனன் இருக்கிறார் என்றால் நிலைமை அப்படித்தான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.