‘விசாரணை’யை கமல்-ரஜினி பாராட்டியதன் பின்னணி இதுதானா..?


இதற்கு முன்பு ஒருசில படங்கள் அது நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட கமல், ரஜினி இருவரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி நாலு வார்த்தை பேசுவார்கள்.. அந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் அவர்களது நண்பர்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.. அதைத்தாண்டி ஒரு சில நல்ல படங்களையும் பாராட்டியிருக்கிறார்கள் தான்.. ஆனால் அது அரிதிலும் அரிதான விஷயம் தான்.

இந்த வாரம் தியேட்டர்களில் வெளியான ‘விசாரணை’ படத்தை அது வெளியாவதற்கு முன்னரே அதாவது பத்து நாட்களுக்கு முன்பே கமல் பாராட்டிவிட்டார்.. நான்கைந்து நாட்களுக்கு முன் ரஜினியும் நன்றாக இருக்கிறது என பாராட்டினார்.. இவர்கள் பாராட்டுக்கு உண்மையிலேயே ஏற்ற படம் தான் விசாரணை..

ஆனால் இவர்கள் இருவரும் தொடர்ந்து இந்தப்படத்தை பாராட்டியுள்ளதன் பின்னணியில் இந்தப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ள லைக்கா நிறுவனம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.. ரஜினியாவது தனது மருமகன் தனுஷ் தயாரித்த படம் என்பதற்காக பாரட்டலாம் என்றாலும் கமலும் வான்டட் ஆக பாராட்ட காரணம் லைக்காவின் வேண்டுகோள் தானாம்.. காரணம் கமல், ரஜினி இருவருமே இப்போது லைக்கா தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள் தானே.. அந்த நட்பின் அடிப்படையில் பாராட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.