சேரனின் திருமணத்துக்கு ஆப்பு வைத்த ஓவியா.. திகிலில் தயாரிப்பாளர்..!


ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு போகப்போகுது என்பதுபோல சினிமாவை விட்டு விலகிவிட்டார் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், எப்படியோ ஒரு தயாரிப்பாளரை பிடித்து திருமணம் என்கிற படத்தை எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் சேரன்.

வினியோகஸ்தர்களால் தீண்டப்படாமல் பல மாதங்களாக பெட்டிக்குள் முடங்கி இருந்த இந்தப்படம் ஒருவழியாக தற்போது மார்ச்-1 ஆம் தேதி திரைக்கு வருகிறது

மேலும் சில வருடங்கள் சேரன் டைரக்ஷன் துறையை விட்டு விலகி இருந்தது இந்தப்படத்தை கிட்டத்தட்ட நாடகபாணியில் படமாக்கி இருக்கிறார்கள் என்கிற செய்தி வெளியே கசிந்தது இவையெல்லாம் படத்திற்கான மைனஸ் பாயிண்டுகளாக அமைந்துள்ளன

மேலும் தம்பிராமையாவின் மகன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பதும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம் என்று சொல்லப்படுகிறது

ஏற்கனவே சில முறை ரிலீஸ் தேதி தள்ளிப் போன நிலையில் இந்த படத்தை மார்ச்-1ஆம் தேதி ரிலீஸ் செய்தே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த சூழலில் அதே தேதியில் ஓவியா கோக்குமாக்காக நடித்துள்ள 9௦ ML படம் ரிலீசாக இருப்பது வேறு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது..

அந்தப் படம் ஏற்படுத்தும் பரபரப்பால் கூட்டமெல்லாம் அங்கே போய்விட்டால், திருமணத்தை நடத்தி வைக்க யாருமே வராமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் படக்குழுவினரிடம் எழுந்துள்ளது. இதையெல்லாம் மீறி இந்த படம் ஜெயித்து வந்தால் நமக்கு சந்தோசம் தான்..