போன வருடம் தானே ‘றெக்க’ படத்தில் விஜய்செதுபதிக்கு ஜோடியாக நடித்தார் லட்சுமி மேனன்.. ஆனால் இந்த வருட துவக்கத்திலேயே மீண்டும் விஜய்செதுபதியுடன் இன்னொரு படத்தில் நடிக ஒப்ந்தமாகியுள்ளார் என்றால் புருவம் உயரத்தானே செய்யும்.. ஆனால் நீங்கள் நினைப்பதுபோல கிசுகிசுவுக்கு இடம் கொடுக்கும் விஷயம் எதுவும் இதில் இல்லை..
ரேணிகுண்டா பன்னீர்செல்வம் இயக்கம் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் இல்லையா.. அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளையில் அவருடன் நடித்த ரித்திகா சிங்கையே நடிக்கவைக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் முடிவுசெய்தார்களாம் ஆனால் மதுரையில் நடக்கும் கதைக்களம் என்பதால் மதுரை நேட்டிவிட்டிக்கு ரித்திகா சிங் செட்டாகமாட்டார் என முடிவுசெய்தார்களாம்.
அதன்பின்னரே இந்த வாய்ப்பு லட்சுவுக்கு சென்றுள்ளது.. ஏற்கனவே சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, ஜிகர்தண்டா, றெக்கை’ என மதுரை பெண்ணாக நடித்த அனுபவம் லட்சுமி மேனனுக்கு இருப்பதால் எந்தவித மாற்றுக்கருத்தும் இன்றி இந்தப்படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.