த்ரிஷாவுக்கு கல்யாணமா?

12 வருடம் தமிழ் சினிமாவை ஆண்டு விட்டு, இறுதியாக திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டார் த்ரிஷா. “ரேடியன்ஸ் மீடியா” ஓனர் “வருண் மணியனை” மணக்க முடிவு செய்திருக்கிறார்.

இது குறித்து த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கூறுகையில்

“அனைத்து சினிமா துறை மற்றும் நண்பர்களுக்கு, வரும் ஜனவரி 23 அன்று மிகவும் தனிப்பட்ட முறையில் இரண்டு குடும்பங்களின் தலைமையில் எனக்கும் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது”

என்று தன் மேல் இருந்த பொய்யான புரளிகளை உடைத்தார்.