பீப்’ சாங் புகழ் சிம்புவுடன் சேர்ந்து தேவையில்லாமல் தனது பெயரை கெடுத்துக்கொண்ட அனிருத்திற்கு தொடர்ந்து அடிமேல் அடி கிடைத்து வருகிறது. தனுஷ் தான் நடித்து வரும் ‘கொடி’ படத்திற்கு அனிருத்தை புக் பண்ணாமல் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அந்த அதிர்ச்சியின் சுவடு மறைவதற்குள் அடுத்து அடியாக தனது இன்னொரு படமான ‘அம்மா கணக்கு’க்கு இசைஞானி இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் தான் தான் வளர்த்து ஆளாக்கிவிட்ட அனிருத் மீது, தனுஷ் வெறுப்பில் இருப்பதை சூசகமாக உணர்த்திவிட்டார் என்றுதான் திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.