நீயும் உருவுன.. நானும் உருவிட்டேன் ; அஜித்-விஜய் டைட்டில் அட்ராசிட்டி..!

அஜித் படத்துக்கு ‘வேதாளம்’ என டைட்டில் வைத்த கொஞ்ச நாளிலேயே விஜய்யின் ‘புலி’ படம் வெளியாக அதில் எங்கு பார்த்தாலும் ஒரே வேதாளம் மாயம் தான். ஆக, டைட்டிலை எங்கிருந்து சுட்டார்கள் என்கிற விஷயம் நொடிப்பொழுதில் தெரிந்து சந்தி சிரித்துவிட்டது. விஜய்யின் ரசிகர்கள் கெக்கலிக்க, அஜித் ரசிகர்கள் தலையை தொங்கப்போட்டார்கள்..

தங்களுக்கும் நேரம் வராமலா போய்விடும் என நேரம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு விஜய் இவ்வளவு சீக்கிரமே வாய்ப்பு கொடுப்பார் என யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்..? அட்லீ டைரக்சனில் தான் நடித்துவரும் படத்திற்கு இப்போது ‘தெறி’ என டைட்டில் வைத்துள்ளார்.

இது வேதாளம் படத்தில் அஜித் பேசும் ‘தெறிக்க விடலாமா’ டயலாக்கில் இருந்து உருவியதுதான். ஆக அஜித்திடம் இருந்து விஜய் பதிலுக்கு பதில் டைட்டிலை உருவினாலும் கூட, எங்க ‘தல’கிட்ட இருந்துதானே எடுத்துருக்காரு என இனி கொஞ்ச நாளைக்கு அஜித் ரசிகர்கள் கலாய்த்து காய்ச்சி எடுப்பார்கள் தானே..?