உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பாலிசி. அதை நாம் தட்டிக்கேட்க முடியாது. அது தனிமனித சுதந்திரம். அஜித் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். சொந்தப்படத்தின் புரமோஷனுக்கும் வர மாட்டார். அட, சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதில் கலந்து கொள்வாரா என்றால் அதுவும் கிடையாது.
சரி விடுங்கள்… நடிகர் விஷால் தனது தங்கை ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு அஜித்தின் வீடு தேடிச் சென்று அழைப்பிதழ் வைத்தார். ரஜினி முதல் ஸ்டாலின்வரை அனைவரும் கலந்து கொண்ட அந்தத் திருமணத்துக்கு அஜித் வரவில்லை. சக நடிகர் வீட்டு விசேஷம் என பார்க்காவிட்டாலும் கூட, நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க மரியாதைக்காகவது தலையைக்காட்டியிருக்கலாமே.. அட..அவர் வரவில்லையென்றாலும் தனது மனைவி ஷாலினியையாவது அனுப்பி வைத்திருக்கலாமே என்று திருமண மண்டபத்திலேயே முணுமுணுப்பு கேட்டதாக கூறுகிறார்கள்.
இத்தனைக்கும் இதுநாள் வரை அஜித்துக்கும் விஷாலுக்கும் எந்தவிதமான சச்சரவுகளும் இருந்ததில்லை.. அப்படி அவ்வப்போது முட்டல் மோதல் இருந்தது போல தோற்றமளித்தது கூட இளைய தளபதி விஜய்யுடன் தான்.. ஆனால் மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இளையதளபதி விஜய் நேரில் வந்து வாழ்த்தினாரே…
அதைவிட அவர் செய்த இன்னொரு காரியம் தான் பலரையும் திகைக்க வைத்தது. அவர் வந்த சமயத்தில் அப்போது மேடையில் வாழ்த்துவதற்காக பலரும் காத்திருந்த நிலையில் விஜய்யும் அவர்களுடனேயே வரிசையில் நின்று தன் முறை வந்தபிறகே மணமக்களை வாழ்த்தினார். அதை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.
இந்த ஒரே விழாவில் விஜய்யின் மேன்மையும், அஜித்தின் கீழ்மையும் வெளிப்பட்டுள்ளது என்றே திரையுலகத்தினரும் ரசிகர்களும் பேசிக்கொள்கிறார்கள்.