பிரபுதேவாவை டீலில் விட்டுவிட்டார்களா கார்த்தி-விஷால்..?


நடிகர்சங்க கட்டடம் கட்டும் நிதிக்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து பத்து கோடி ரூபாய் தருவதாக கூறினார்கள் இல்லையா..? அதன் முதல்படியை தாங்கள் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் மூலம் எடுத்து வைத்தார்கள்.. இந்தப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் அவர்கள் சொன்ன தொகை அந்த கட்டட நிதிக்கு போகும் என்று என விஷால் கூறினார்ர்..

மறைந்த இயக்குனர் சுபாஷ் தான் இந்தப்படத்தின் கதையை எழுத பிரபுதேவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவுக்கு ஒரு ‘ஷோலே’ மாதிரி இருக்கும் என்றெல்லாம் விஷால் கூறினார். ஆனால் தற்போதோ படம் மேற்கொண்டு நகருவதற்கான அறிகுறியே இல்லை..

காரணத்தை விசாரித்தால் சுபாஷ் எழுதிய கதையை தனது பாணியில் மாற்றிய பிரபுதேவா, அதை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டதாகவும், இதனால் அதிர்ச்சியான விஷால்-கார்த்தி இருவரும் கோபத்தில் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர் என்றும் இதனால் பிரபுதேவா நொந்துபோயுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.