நாடோடிகள் படம் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அதன்பின் சில சுமாரான படங்களை கொடுத்தாலும் அவை எதுவும் அவர் கையை பெரிதாக கடிக்கவில்லை.
ஆனால் சிம்புவை வைத்து அவர் தயாரித்த ‘ஏஏஏ’ படம் அவரை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.. அந்த நட்டத்தை சரிசெய்ய சிம்பு கொஞ்சம் கூட முன்வரவில்லை.. தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால், மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில் குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு நடித்து தருவதாக ஒப்பந்தமாகி இருக்கிறார்..
படத்திற்கு அயோக்யா என டைட்டில் வைத்துள்ளார்கள்.. டைட்டிலை பார்க்கும்போது சிம்புவுக்காகவே வைக்கப்பட்ட டைட்டில் மாதிரி தெரிகிறதே பாஸ்.