விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் வெளியாகியுள்ள படம் சர்கார். வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்தப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதேசமயம் இன்று காலை 6 மணி அளாவில் ரஜினி, தான் நடித்துவரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது ஏதேச்சையாக நடந்த ஒரு விஷயம்.
இன்றைய தினம் எல்லாம் சர்கார் டீசரை பற்றியே ஊரெங்கு பேச்சாக இருக்கும் என நினைத்து சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் குதித்த விஜய் ரசிகர்களுக்கு ரஜினியின் ட்வீட் பேரிடியாக இறங்கியது. அதற்கேற்றவாறு இன்று பெரும்பாலும் ரஜினியின் பேட்ட படத்தை பற்றிய பேச்சாகவே மீடியக்களிலும் சோஷியல் மீடியாக்களிலும் செய்திகள் ஓடின.
சர்கார் டீசர் வெளியான பின்னர்தான், அதன் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது. இப்படி சர்கார் டீசர் ரிலீஸ் பரபரப்பை ரஜினி தனது ட்வீட் மூலம் அடக்கிவிட்டதை ஜீரணித்துக்கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள், ரஜினி வேண்டுமென்றே விஜய்க்கு எதிராக இப்படி செய்துள்ளார் என கொந்தளித்து வருகின்றனர்.
விஜய்க்கு காய்ச்சல் வந்தால் தான் அது செய்தி, ரஜினி இருமினாலே அது செய்திதான் என்பதை இவர்கள் எப்போது தான் புரிந்துகொள்ள போகிறார்களோ..?