விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ஓஹோவென ஓடிக்கொண்டு இருக்கிறது..டைட்டிலே பிச்சைக்காரன் என இருந்ததால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பலரும் படத்தை வாங்க, திரையிட தயங்கினார்கள்… ஆனால் இன்று இந்த பிச்சைக்காரன் இவர்களா அனைவரையும் இன்னும் பணக்காரனாக்கி இருக்கிறது..
இதுபற்றி பிச்சைக்காரன்’ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஜய் ஆண்டனி.. “ஒருவேளை இந்தப்படம் ஓடியிருக்காவிட்டால் நான் நிஜமாகவே பிச்சைக்காரன் ஆகியிருப்பேன்.” என வேடிக்கையாக குறிப்பிட்டார்
“இதேபோன்றதொரு நிலைமை அன்று எம்.ஜி.ஆர் ’நாடோடி மன்னன்’ படத்தை தயாரித்து இயக்கி, நடித்தபோது அவருக்கு ஏற்பட்டதாக சொன்னார்கள். எம்.ஜி.ஆர் கூட இந்த இந்தப்படம் ஓடினால் நான் மன்னன்.. இல்லாவிட்டால் நான் நாடோடி என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார்கள்.. நானும் அந்த நிலையில் இருந்து இயக்குனர் சசியால் இப்போது மீண்டுவிட்டேன்” என்று கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.