வரும் மே-3௦ல் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விஷால் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்த காரணத்தால் தான் இந்த மாதம் வெளியாகவேண்டிய ஏ.எல்.விஜய்-ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள ‘வனமகன்’ படம் கூட விஷால் சொன்னதற்காக ஜூன் மாத இறுதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது
அந்த போராட்டத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்கமும் கலந்துகொள்ளும் என சொல்லப்பட்டிருந்தாலும் கூட, அவர்களோ இதில் கலந்துகொள்ள தங்களுக்கு உடன்பாடு இல்லை என சொல்லிவிட்டார்கள். அதுசரி, புதுப்படத்தை தயாரிப்பாளர்கள் தந்தாள் தானே அவர்கள் தியேட்டரில் ஓட்ட முடியும், வெறும் டப்பிங் படங்களையும் ஆங்கிலப்படங்களையும் வைத்து ஓட்டிவிடலாம் என நினைத்து விட்டார்களோ என்னவோ..?
இது ஒரு பக்கம் இருக்க விஷால் அறிவித்துள்ள போராட்டம் ஒருவேளை அரசாங்கத்தால் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதன் காரணமாகவோ அல்லது வேறு சில நெருக்கடிகள் காரணமாகவோ உடனேயோ அல்லது ஆரம்பித்த ஓரிரு நாட்களிலோ வாபஸ் வாங்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டால் வழக்கம்போல படங்கள் வெளியாக தொடங்கிவிடும்..
ஆனால் விஷாலின் பேச்சைக்கேட்டு இந்த சம்மர் சீசனில் வசூல் பார்க்க முடியாமல் பள்ளிகள் ஆரம்பித்த சீசனில் படத்தை வெளியிடும் விஜய்யால் அவ்வளவு லாபம் பார்க்க முடியுமா..?
நான் ஏற்கனவே முடிவு செய்திருந்த மாதிரி மே-19லேயே படத்தை ரிலீஸ் செய்திருந்தால் லாபம் பார்த்திருப்பேனே என விஜய் சொனால் அப்போது அவருக்கு விஷால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு என்ன பதில் சொல்லப்போகிறார்..?