மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. மெரினாவிலும் அலங்காநல்லூரிலும் இளைஞர்கள் பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதே சமயத்தில் நடிகர் சங்கத்தை சேர்ந்த தலைவர் நாசரும் பொதுச்செயலாளர் விஷாலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என கூறி அபிராமி மெகா மாலில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்..
இது ஒரு பக்கம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும கோபம் ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் அவர்கள் என்ன பண்ணுவார்கள்.. பாவம்..? ஆளும் வர்க்கம் தான் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது போல பாவனை செய்கிறது.. நடிகர் சங்க பொறுப்பில் உள்ளவர்களையும் மிரட்டி பணியவைத்து இழுத்துச்செல்லும்போது நாசருக்கும் விஷாலுக்கும் வேறு என்ன வழி இருக்கமுடியும்..?