கடந்த வருடம் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த கோரி கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் எழுச்சி போராட்டம் நடத்தினார்கள். தமிழ் திரையுலகமும் தனது பங்கிற்கு இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மௌன போராட்டம் நடத்தியது.
பொது நிகழ்ச்சிகள் மற்றும் திரையுலக கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த அஜித் தனது மனைவி ஷாலினியுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்று ஆச்சர்யப்படுத்தினார்.
ஆனால் இந்தமுறை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்திய மௌன போராட்டத்தில் அஜித் கலந்துகொள்வதை தவிர்த்து விட்டார். இத்தனைக்கும் படப்பிடிப்பு கூட எதுவும் அவருக்கு இல்லை. ரஜினி, கமல், விஜய் ஆகியோர் இதில் கலந்துகொண்ட நிலையில் அஜித் இப்படி தனக்கு தோன்றினால் மட்டுமே இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்ந்து திரையுலகினரின் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.