நேற்று முன் தினம் வெளியான ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தில் ‘கொட்டாவி’ பிரச்சனை தான் பிரதானமாக இருந்தது.. படம் பார்த்த ரசிகர்களில் முக்கால்வாசிப்பேர் தங்களை அறியாமல் கொட்டாவி விட்டதையும் தியேட்டர்களில் கண்கூடாக பார்க்க முடிந்தது. இப்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரின் ஒரே கேள்வியாக இருப்பது இந்தப்படத்திற்கு எதற்காக சூப்பர்ஸ்டாரின் ‘போக்கிரி ராஜா’ டைட்டிலை வைத்தார்கள் என்பது தான்..
போக்கிரி ராஜா என்றாலே ஆக்சன் தெறிக்க வேண்டாமா..? ஒரிஜினலில் சூப்பர்ஸ்டார் ரஜினி இரண்டு வேடங்களில் பின்னியிருப்பார் பின்னி.. ஆனால் இந்தப்படத்தில் ஆக்சனும் இல்லை.. காமெடியும் இல்லை.. கதையும் இல்லை.. நாயகன் ஜீவா படம் முழுவதும் கொட்டாவி மட்டுமே விட்டுக்கொண்டு இருக்கிறார்..கொட்டாவி மட்டுமே விடுகிற ஹீரோவுக்கு எதுக்குய்யா போக்கிரி ராஜான்னு டைட்டில் வச்சீங்க என ஆளாளுக்கு கலாய்த்து வருகிறார்கள்..