கத்தி படத்தின் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்க தமிழீழ ஆதரவாளர்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது லைகா நிறுவனம். கத்தி படத்திற்கு ஏற்கனவே இயக்குநர் சங்கமும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் ஆதரவு தெரிவிக்க நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் மௌனம் சாதித்து வருகின்றனர்.
யாரோ ஒரு புண்ணியவான் கிளப்பிவிட்ட வதந்தியால் இன்று கத்தி படத்திற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வந்துவிட்டது. தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. கத்தி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் கூட்டணி விஜய்யின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் ரகசிய தகவல்கள் நேற்று வெளியாகின. இதனால் விஜய்யின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை தமிழர் தான் என்று எத்தனை தடவை சொன்னாலும் இவங்க நம்ப மாட்றாங்களேன்னு விஜய்யை புலம்ப வைத்துவிட்டார்கள் சிலர்…