அஜித்தை மாறவே விடமாட்டாரா சிவா..? ; கடுப்பில் ரசிகர்கள்..!


எப்போதுமே ஒரே இயக்குனரின் அடுத்தடுத்த படங்களில் ஒரு ஹீரோ தொடர்ந்து நடிப்பது அந்த இயக்குனருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் நடிக்கும் ஹீரோவுக்கோ, அவரே சவளைப்பிள்ளையாய் மாறிவிடும் அபாயம் நிறைய இருக்கிறது. கிட்டத்தட்ட அஜித்தின் கண்டிசனும் அந்த லெவலை நோக்கித்தான் போய்க்கொண்டிருப்பதாக அவரது ரசிகர்களே நினைக்கிறார்கள்..

அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிவிட்ட சிவாவே, மீண்டும் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதுதான் இதற்கு காரணம். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்தைச் சொல்லி வருகிறார்கள்.

முக்கியமாக ஒரே விதமான டெம்ப்ளேட்டில் அஜித்தை சிவா காட்டுவதாக பலரும் விமர்சித்திருந்தனர். இதில் அஜித் ரசிகர் ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய், இயக்குனர் சிவாவிடம் இந்த விஷயங்களையெல்லாம் செய்யாதீர்கள் என 28 புள்ளி விவரங்களை அடுக்கியிருக்கிறார். சிவாவை சொல்லி என்ன செய்ய..? இந்த விஷயத்தில் அஜித் அல்லவா முடிவெடுக்கவேண்டும்..