விக்ரம்பிரபு – ஷாம்லி நடிக்கும் “வீரசிவாஜி”

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி.

இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ரோபோசங்கர், ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சுகுமார்

இசை – D.இமான்

எடிட்டிங் – ரூபன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

கலை – லால்குடி இளையராஜா

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

எழுதி இயக்குபவர் – கணேஷ்விநாயக்

இந்த படத்தின் துவக்க விழா இன்று ( 16.09.2015 ) புதுச்சேரியில் நடைபெற்றது. விழாவில் இளையதிலகம் பிரபு, திருமதி. புனிதா பிரபு, இயக்குனர் லஷ்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.