BLOOD MONEY – விமர்சனம்

வளைகுடாவில் தவறான தீர்ப்பால் மரணதண்டனையை எதிர் நோக்கியிருக்கும் கிஷோரும் அவரது தம்பியும், அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடமாட்டோமா என்று வீடியோ வெளியிடும் அவர்களின் தாய், ஸ்ரீலேகா மற்றும் கிஷோரின் மகலாக வரும் விஷ்ருதா, அவர்களுக்கு உதவும் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் செந்தில்குமரன், இப்படி ஒரு வீடியோவை பார்த்த மாத்திரத்தில் தான் பணிபுரியும் தொலைக்காட்சி வாயிலாக அவர்ஜ்களை காப்பாற்ற களமிறங்கு ம் பிரியா பவானி சங்கர், அவருக்கு துணையாக சக ஊடகவியலாளர் ஷிரிஷ் மற்றும் மேலதிகாரி பஞ்சு சுப்பு என்று அத்தனை பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அட சமூக வலைத்தளங்கில் பிரபலமான ஊடகவியாளர் செந்திலும் , செய்தி வாசிப்பாளராகவே சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கரின் தோளில் உள்ள நட்சத்திர அந்தஸ்தில் இன்னொரு ஸ்டார் சேரும்படியான ஒரு படம், நயன் தாராவுக்கு ஒரு அறம் போல இவருக்க இந்தப்படம் என்று சொன்னால் அதுமிகையாகாது.

கதை முதல் இயக்கம் வரை எல்லா சுமைகளும் இயக்குநர் தலையில் ஏற்றப்பட்டுவிட்டால் இதுபோன்ற சிறந்த படைப்புகளுக்கான இடைவெளி அதிகரித்துவிடும். அந்த குறையை போக்கும் வகையில் கதையாக்கத்தை பேராசிரியர் சங்கரதாஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார், சிறப்பாகவே.

சூர்யா ராஜீவனின் கலை இயக்கம் படத்திற்கு பெருமளவில் கைகொடுத்திருக்கிறது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை நினைவுபடுத்தும் நேர்த்தியான கலை இயக்கம். இக்கதைக்கு தேவையான ஒளிப்பதிவில் ஜி பாலமுருகனும் ஸ்கோர் செய்திருக்கிறார். சதிஸ் ரகு நந்தன் நல்லிசையை வழங்கியிருக்கிறார்.

இயக்குநர் சர்ஜுன் கே எம் , ஏற்கனவே பட ஆக்கத்தில் தனி முத்திர பதித்து தன் பயணத்தை ஆரம்பித்தவர், அழகான கதைக்களமும் சிறப்பான நடிகர் பட்டாளமும் கிடைத்தால் சும்மா விடுவாரா என்ன..? பிளட் மணி இவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.