கெத்து காட்டும் ஹீரோக்களுக்கு ஆப்பு வைத்த ஜீவா..!

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இப்போதுதான் தனது சம்பளமாக ரெண்டு கோடியையே தொட்டுள்ளார்.. அவ்வளவு பெரிய ஜாம்பவானே ரெண்டு கோடி வாங்க 35 வருஷம் ஆகியிருக்கு.. ஆனா நம்ம தமிழ் சினிமாவுலதான், நண்டு சிண்டுக கூட அறிமுகமாகி ஒரு படம் ஹிட்டாச்சுன்னா உடனே கோடிகள்ல ரேட் பேச ஆரம்பிச்சுடுறாங்க..

அடுத்த படமும் ஓடிருச்சுன்னா அவ்வளவு தான் மூணு கோடில வந்து நின்னுடுறாங்க.. ஹாட்ரிக் ஹிட்டுனா கேட்கவே வேணாம்.. சம்பளத்தோட ஒரு ஏரியா ரைட்சையும் சேத்து கேட்க ஆரம்பிச்சுடுவாங்க… ஆனா அடுத்து வரிசையா படம் மண்ணை கவ்வுதுன்னு வையுங்க… ரேட்டை குறைச்சுக்குவாங்கன்னா நினைக்கிறீங்க..?

அதான் இல்ல..படமே இல்லாம இருந்தாலும் இருப்பாங்களே தவிர, சம்பளத்தை குறைக்கவே மாட்டாங்க.. சரி சம்பளத்தை குறைக்கலாம்னு ஒருகட்டத்துல நினைப்பு வர்ற நேரத்துல இவங்கள ரசிகர்கள் மறந்துருப்பாங்க.. அப்புறம் வீட்டுலேயே உக்காந்து திருட்டுப்பயலே படத்தை டிவிடில போட்டு பார்த்துக்கிட்டே இருக்கவேண்டியது தான்.

இல்லைன்னா எங்கேயாவது சாகசம் பண்ண கிளம்பவேண்டியதுதான்.. இன்னும் கொஞ்ச நாள் போனா ஜீவாவும் இந்த லிஸ்ட்டுல தான் சேர்ந்திருப்பாரு.. ஆனா டக்குன்னு சுதாரிச்சுட்டாரு.. பின்னே கோ படத்தோட வெற்றிய வச்சே எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும்.. அடுத்தடுத்து கொடுத்ததெல்லாம் பிளாப் படங்கள்..

அப்படியே விட்டா வீட்டுல உக்கார வச்சுருவாங்கன்னு கொஞ்சம் லேட்டா புரிஞ்சுக்கிட்ட ஜீவா, தன்னோட சம்பளத்தை அதிரடியா குறைச்சிட்டாரு. இப்ப திருநாள் படத்துல நயன்தாராவை விட, இவர் சம்பளம் கம்மின்னா நீங்களே எவ்வளவுன்னு கணக்கு போட்டு பாத்துக்குங்க… அதுமட்டுமல்ல, சும்மா பில்டப் பண்ற ஆளுங்களுக்கு இடம் கொடுக்காமல், நல்ல கதையம்சம் உள்ள அஞ்சாறு படங்களையும் இதே ரேட்ல பேசி முடிச்சு திரும்பவும் பிசியாகிட்டாரு.

இப்ப இவர் சம்பளத்தை குறைச்ச விஷயம் வெளியே கசிஞ்சிருச்சு. அதனால் இவர் ரேங்குல இருக்குற, தொடர்ந்து பிளாப் கொடுத்துட்டு வந்தாலும் கெத்து காட்டிட்டு வர்ற மற்ற நடிகர்களுக்கு ஆப்பு வச்ச மாதிரி ஆகிருக்கு.. இதை ஆப்பா எடுத்துகுறதும், வாய்ப்பா எடுத்துக்குறதும் அவங்கவங்க புத்திசாலித்தனம்.