வெற்றிவேல் கதாநாயகியை வளர்த்துவிடும் சசிகுமார்..!


சசிகுமார் அப்பட்டிப்பட்டவர் இல்லையென்ற முன்னுரையுடன் தான் இந்த செய்தியை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.. சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடித்தவர் சுவாதி.. அதை தொடர்ந்து போராளி படத்திலும் சசிகுமாருடன் நடித்தாரா இல்லையா..? அதேமாதிரி நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா, அனன்யா இருவரும் அடுத்து சசிகுமாருடன் மலையாளத்தில் கூட இணைந்து நடித்த கதை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை..

இரண்டாம் வாய்ப்பு என்கிற அந்த அடிப்படையில் தான் தன்னுடன் ஏற்கனவே ‘வெற்றிவேல்’ படத்தில் ஜோடியாக நடித்த நிகிலா விமலுடன் இணைந்து தற்போது ‘கிடாரி’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.. சசிகுமாருடன் இணைந்து நடித்த நடிகைகள் தமிழ் இண்டஸ்ட்ரியில் ஓரளவு பிரபலமாகி விட்டார்கள் என்பதும் உண்மை. அந்த அடிப்படையில் தான் நல்ல நடிகையான நிகிலா விமலை வளர்த்து விடுகிறாராம் சசிகுமார்.