“போராட்டத்திற்கு முன்பே அதை செய்தவன் நான்” ; ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்..!


கடந்த ஒருவார காலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் விவசாயிகளை காக்க வேண்டும், அந்நிய நாட்டு பொருட்களை ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துகளும் இந்த போராட்டத்தின் போது முன் வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில கடைகளில்,கோக்,பெப்சி போன்ற அன்னிய நாட்டு பானங்கள் தடை செய்யப்பட்டு, இளநீர், பதநீர் போன்ற இயற்கை பானங்கள் விற்கத் துவங்கியுள்ளனர் சரி ஊருக்கே உபதேசம் செய்யும் விதமாக சில வருடங்களுக்கு முன் ‘கத்தி’ பிரச்சனையில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதுபற்றி அவர் என்ன சொல்கிறார். “ஆண்டுகளுக்கு முன்பு கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே,கோக்,பெப்சி போன்ற அந்நிய நாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டேன்.தற்போது நான் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களிலும் அந்நிய நாட்டு பானங்களை தடை செய்துள்ளேன்.”என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.