கேஎஸ்கே டெக்னாலஜிஸை “நடிகை நமீதா” தொடங்கி வைத்தார்

namitha_inaugurates_ksk_technologies

தமிழ்த்திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவரும், தொழில் மற்றும் வர்த்தகத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்டவருமான நடிகை நமீதா இன்று “KSK Technologies” என்ற நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

PHP என்ற தொழில் நுட்பத்தின் மூலம்தான் இன்று பெரும்பாலான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனை வடிவமைக்கும் முறை தெரிந்தவர்கள் மிகக்குறைவு. அதை கற்றுத்தரவும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் KSK Technologies நிறுவனம், PHP பற்றிய முழு தொழில்நுட்பத்தை கற்றுத்தருகிறது. இந்த படிப்பின் மூலம் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற முடியும். மேலும் சொந்தமாக இணையதளங்களையும் உருவாக்கிக்கொள்ளலாம். அதன் வழிமுறைகளை முழுமையாக சொல்லித்தருகிறது KSK Technologies.

அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். இந்த இணைய தொழில்நுட்ப படிப்புகள் வார நாட்களிலும், வார இறுதியிலும் கற்றுக் கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே இணைய வடிவமைப்புக்கான ஒப்பந்தங்களைப் பெற்று இணையதளத்தை வடிவமைத்தும் வருமானம் ஈட்ட முடியும் என்பது இந்தப் படிப்பின் சிறப்பம்சமாகும்.

இணையதளங்களை உருவாக்கும் முறை பற்றி சொல்லித் தருவதோடு, இணைய தளங்களை உருவாக்கியும் தருகிறோம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இணைய தளங்களை உருவாக்கிக்கொடுத்துள்ளோம்.

KSK Technologies நிறுவனர் கி செல்வகுமார், திரைப்பட உதவி மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.