குத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா


இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா பதிவிட்டுள்ளார்.

My love for sports coming alive on screen
All set to face the boxers in the ring with @beemji sir for our next ? It’s the most challenging film of my career. Loving the experience. #Ranjith sir is just phenomenal ??? @Music_Santhosh@K9Studioz#AnbuArivu#Muralipic.twitter.com/1ejKMipNYh

— Arya (@arya_offl) February 20, 2020

காலா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ரஞ்சித் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்தது.

ஆர்யாவின் இந்த ட்விட்டின் மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது. இந்த திரைப்படம் தனது திரை உலகில் சவால் நிறைந்த படமாக இருக்கும் என தெரிவித்துள்ள ஆர்யா திரைப்படத்திற்காக தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.