ஜீவாவுக்கு கிடைக்கப்போவது ஆப்பா..? ஆச்சர்யமா..?


கடந்த சில வருடங்களில் எந்த ஒரு நடிகரின் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவே இல்லை. இதற்கு முந்தைய நிகழ்வுகளில் அப்படி சில நடிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி அவற்றில் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறிய வரலாறு உண்டு..

இருபது வருடங்களுக்கு முன் அதாவது நடிகர் கார்த்திக் நடித்த கிழக்கு முகம். இதில் கிழக்கு முகம் ஒரு வாரம் கூட ஓடாமல் பிளாப் ஆனது. ஆனால் உள்ளத்தை அள்ளித்தா வெள்ளிவிழா கொண்டாடி, சூப்பர் டூப்பர் ஹிட்டாகி கார்த்திக்கின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அதேபோல பத்து வருடங்களுக்கு முன் பரத் நடித்த சென்னை காதல், எம் மகன் என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் சென்னை காதால் மண்ணை கவ்வா, எம் மகன் படம் ஓஹோவென ஓடியது. அதன்பின்னர் வேறு எந்த நடிகருக்கும் இப்படி இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியான அதிசயம் நிகழ்ந்ததில்லை.

இந்தநிலையில் ஜீவா நடித்துள்ள ‘கீ’ படமும் ‘கலகலப்பு 2’ படமும் பிப்-9ஆம் தேதி ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.

கீ பட ரிலீஸ் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது இந்தப்படமும் பிப்-9ஆம் தேதியே ரிலீஸாக உள்ளது.

ஜீவாவுக்கு போட்டியாக இருக்கவேண்டாம் என்றுதான் விஷால் தனது இரும்புத்திரை படத்தின் ரிலீஸ் தேதியை கூட தள்ளிவைத்தார். முந்தைய வரலாற்றின் படி பார்த்தால் ஜீவாவுக்கு இந்த இரண்டு படங்களில் ஏதோ ஒன்று நிச்சயம் ஹிட்டாக அமைய வேண்டும்.. இரண்டுமே ஹிட்டானால் அவரை விட கூடுதல் சந்தோசம் நமக்குத்தான்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *