பிகினி டிரஸ்; சமந்தாவை நச்சரிக்கும் ரசிகர்கள்

samantha_news

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது சமந்தா இப்படி ஒரு டுவீட்டை டுவிட்டரில் போட்டு, தற்போது மீண்டும் அது சமந்தாவுக்கே எதிராக கிளம்பும் என்று அவர் சற்றும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். போன வருடம் செப்டம்பர் மாதம் 12ந் தேதி சமந்தா வரது டுவிட்டரில் அவரது ரசிகருக்கு ஒரு பதில் கூறியிருந்தார். அதாவது அந்த ரசிகர் சமந்தாவிடம் கேட்ட கேள்வி இதுதான் “அஞ்சான் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறீர்களாமே” இதற்கு பதிலளித்த சமந்தா “If u have watched my films u wldnt need me to tell u that the rumour of me sporting a bikini in my next is just a rumour…put this to rest” என்று கூறியிருந்தார்…

ஆனால் தற்போது அஞ்சான் படம் பார்த்த சமந்தா ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும், இதில் அவர் நீச்சல் உடையில் வரும் காட்சி 5 நொடிகள் வரை காட்டி அசத்தியிருக்கிறார் லிங்குசாமி. இப்போது மீண்டும் ரசிகர்கள் அனைவரும் சம்ந்தாவை போட்டு நச்சரிக்கிறார்களாம், ஏன் அந்த மாதிரி நடித்தீர்கள், அப்போது நாங்கள் கேட்டபோது இல்லை என்று மறுத்தீர்களே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கடுப்பேத்துகிறார்களாம்… இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாரோ சமந்தா பொறுத்திருந்து பார்ப்போம்…

samantha