பெண்களுக்காக சிம்பு போராடணுமாம் ; சொல்வதெல்லாம் உண்மை நாயகி அழைப்பு..!


சமீபத்தில் சிம்புவின் ‘ஏஏஏ’ படத்தில் தமன்னா அணிந்திருந்த உடைகுறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.. அதுபற்றி பின்னர் சிம்புவும் விளக்கமளித்தாராம்.. இந்த விளக்கத்தில் திருப்தியடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சிம்புவிடம் பெண்களின் உரிமைக்காக போராட நீங்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோளும் வைத்துள்ளாராம்.

ஒளியப்போனவன் தலையாரி வீட்டில் ஒளிஞ்ச கதையாக பெண்களுக்காகவே ஸ்பெஷலாக “எவண்டி உன்ன பெத்தான்.. என் கையில கெடைச்சா செத்தான்”, “என்ன …க்கு லவ் பண்ணனும்” என்கிற தெய்வீக பாடல்களை எழுதிய சிம்புவை பெண்களின் உரிமைக்காக போராட சொல்லி லட்சுமி ராமகிருஷ்ணன் அழைத்திருப்பது ஆச்சர்யம் தான்..

இந்த விஷயத்தை பொறுத்தவரை லட்சுமி ராமகிருஷ்ணன் அழைத்திருப்பதே ஒரு ஆச்சர்யம் தான் குடும்ப பெண்களின் அந்தரங்கத்தை தனது நிகழ்ச்சி மூலம் வீதியில் ஏலம் போட்டு அந்த பப்ளிசிட்டியில் குளிர்காயும் லட்சுமி ராமகிருஷ்ணன், ‘பீப்’ பாடல் புகழ் சிம்புவை பெண்களுக்காக போராட அழைக்கிறார்.. எல்லாம் காலக்கொடுமை என்றும் சிலர் பேசிக்கொண்டது நம் காதுகளிலும் விழவே செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *