கோகோவுக்கு ரஜினி-ஷங்கர் பாராட்டு ; காரணம் இதுதான்..!


சமீபத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் வெளியானது.. ஆச்சர்யமாக இந்தப்படத்திற்கு ரஜினியும் இயக்குனர் ஷங்கரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.. ரஜினி சில நல்ல படங்களை பார்த்துவிட்டு பாராட்டுவது வாடிக்கைதான்.. ஷங்கரும் கூட அப்படித்தான்.

ஆனால் இந்த இரண்டு பேரும் சேர்ந்து அடுத்தடுத்து ‘கோலமாவு கோகிலாவை பாராட்டியுள்ளார்கள் என்றால் அதில் விஷயம் இல்லாமல் இருக்குமா..? ஆம். ரஜினி-ஷங்கரின் 2.O ‘ படத்தை தயாரித்துவரும் லைகா தான் கோலமாவு கோகிலா படத்தையும் தயாரித்துள்ளது.. அந்த நட்பின் அடிப்படையில் தான் இருவரும் படத்தை பாராட்டியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.