வேலைக்காரன் ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்தது என்ன..? ; மனம் திறந்த நயன்தாரா..!


இரண்டு வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் வளர்ந்துவரும் நடிகர்.. அதனால் புதுப்புது நாயகிகளாக தேடி அவருக்கு ஜோடியக்கினார்கள்.. ஓரளவு மார்க்கெட் ஸ்டெடியாக ஆரம்பித்ததும் ஹன்சிகாவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அதையடுத்து நயன்தாராவுடன் நடிக்கவேண்டும் என்கிற கனவு இப்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நனவாகியிருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவுடன் தான் நடித்த அனுபவத்தை தனது நட்பு வட்டாரங்களில் பக்கம் பக்கமாக பேசி வருகிறார் சிவகார்த்திகேயன்.. அது இயல்பானதுதான்.. வழக்கமானதுதான். ஆனால் இன்னொரு பக்கம் நயன்தாராவும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து வருகிறார்.

எத்தனை பக்க டயலாக்கை கொடுத்தாலும் அதை பத்தே நிமிடத்தில் மனப்பாடம் செய்து கொண்டு நடித்து விடுகிறார் சிவகார்த்திகேயன் என்று அவரைப்பற்றி பெருமையாக ஒரு தொலைக் காட்சி பேட்டியில் தெரிவித்தார் நயன்தாரா. மேலும், சிவகார்த்திகேயன், ரொம்ப கலகலப்பான நடிகர். அவர் ஸ்பாட்டில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளுவும் தெரியாது. அந்த அளவுக்கு நடிப்புக்கு நடுவே அவ்வப்போது காமெடி செய்து கொண்டேயிருப்பார் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *